கிரிக்கெட்

டக் அவுட் ஆன கோலி… அடுத்தடுத்து விக்கெட்டுகளைப் பறிகொடுக்கும் இந்திய அணி!

Published

on

இந்தியா- இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி.

இந்தியா- இங்கிலாந்து இடையே ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நாட்டிங்காம் நகரில் நடக்கத் தொடங்கி உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்ததது. சிறப்பான பந்துவீச்சால் இங்கிலாந்து அணி 183 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

இதையடுத்து நேற்று பேட்டிங் செய்யத் தொடங்கியது இந்திய அணி. 21 ரன்கள் வரையில் விக்கெட் இழக்காமல் ஆட்டத்தை நிறைவு செய்தது. இன்று அதிலிருந்து ஆடிய இந்திய அணி 97 ரன்களின் போது முதல் விக்கெட் ஆக ரோகித் சர்மாவை இழந்தது. அடுத்து களமிறங்கித புஜாரா 4 ரன்கள், கேப்டன் கோலி டக் அவுட், ரஹானே 5 ரன்கள் என அடுத்தடுத்து விக்கெட்டுகள் காலியாகின.

அதிகப்படியாக டக் அவுட் ஆன கேப்டன்கள் வரிசையில் முன்னிலை வகிக்கிறார் கேப்டன் கோலி. தற்போது 4 விக்கெட்டுகள் இழப்புக்கு இந்தியா 125 ரன்கள் எடுத்துள்ளது.

Trending

Exit mobile version