கிரிக்கெட்

3ம் நிலை வீரராக களமிறங்கி 10,000 ரன்கள்: விராட் கோலி சாதனை

Published

on

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இன்று புனே நகரில் நடைபெற்று வரும் 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்ததால் முதலில் இந்திய அணி களத்தில் இறங்கியது.

தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் 4 ரன்களிலும் ரோகித் சர்மா 25 ரன்களிலும் அவுட் ஆன நிலையில் அடுத்து களமிறங்கிய கேப்டன் விராத் கோலி மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் அதிரடியாக விளையாடி வருகின்றனர். சற்றுமுன் வரை விராட் கோலி 66 ரன்களும், கேஎல் ராகுல் 60 ரன்கள் எடுத்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மூன்றாம் நிலை வீரராக களமிறங்கி 10 ஆயிரம் ரன்களை விராத் கோஹ்லி குவித்து சாதனை புரிந்துள்ளார். இந்த சாதனையை அடுத்து அவருக்கு கிரிக்கெட் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சற்று முன் வரை இந்திய அணி 32 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில் இந்திய அணி வென்று விட்டால் தொடரை வென்று விடும் என்பதால் இந்திய அணியினர் வெகு சிரத்தையுடன் விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version