கிரிக்கெட்

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக கோலி அடித்த சதத்தால் தகர்ந்த பல சாதனைகள்!

Published

on

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில் இரண்டாவது போட்டி 11-ஆம் தேதி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் விராட் கோலி அடித்த சதம் ஒருநாள் போட்டிகளில் பல சாதனைகளை தகர்த்தெரிந்துள்ளது.

இந்த சதம் விராட் கோலிக்கு ஒருநாள் போட்டிகளில் 42-வது சதமாகும். அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் சச்சின் முதலிடத்திலும் தொடர்ந்து விராட் கோலி இரண்டாம் இடத்திலும் உள்ளார். ஒரு அணிக்கு எதிராக கேப்டனாக அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் கோலி முதலிடத்தில் உள்ளார். மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக கோலி 8 சதம் அடித்து முதல் இடத்தில் உள்ளார். இரண்டாம் இடத்தில் ரிக்கி பாண்டிங் உள்ளார். அவர் நியூசிலாந்து அணிக்கு எதிராக 5 சதங்கள் அடித்துள்ளார்.

ஒரு வீரராக ஒரு அணிக்கு எதிராக அதிக சதம் அடித்த பட்டியலில் சச்சின் முதல் இடத்தில் உள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சச்சின் மொத்தம் 9 சதம் அடித்துள்ளார். இரண்டாம் இடத்தில் உள்ள கோலி மேற்கிந்திய தீவுகள், இலங்கை, ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு எதிராகவும் 8 சதங்கள் அடித்துள்ளார். கேப்டனாக அதிக சதம் அடித்த பட்டியலில் தோனி 19 சதங்களுடன் முதல் இடத்தில் இருந்தார். தற்போது கோலி 20 சதங்களுடன் அந்த சாதனையை தகர்த்துள்ளார்.

ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர்களுக்கான பட்டியலில் கங்குலியைப் பின்னுக்குத் தள்ளி எட்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார் கோலி. மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக அதிக ரன் குவித்த வீரர்களுக்கான பட்டியலில் 1930 ரன்களுடன் பாகிஸ்தானின் மிடாண்டாட் 26 ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்தார். 64 போட்டிகளில் இவர் செய்த சாதனையை தற்போது கோலி 34 போட்டிகளிலேயே தகர்த்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version