கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் அணியை 200 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் வழிநடத்திய 3வது கேப்டன் விராட் கோலி!

Published

on

இந்தியா சுற்றுப் பயணம் வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி டெஸ்ட், டி20 தொடர்களைத் தொடர்ந்து ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.

இன்று நடைபெற்ற போட்டிக்குத் தலைமை தாக்குவதன் மூலமாக, இந்திய கிரிக்கெட் அணியை 200 சர்வதேச கிர்க்கெட் போட்டிகளில் வழிநடத்திய 3வது கேப்டன் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார்.

தல தோனி

அதிகபட்சமாக 332 சர்வதேச கிர்கேட் போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்திய கேப்டனாக தல தோனி உள்ளார். தோனி தலைமை தாங்கிய 332 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 178 வெற்றிகளை இந்திய அணி பதிவு செய்துள்ளது.

முகமது அசாருதீன்

இரண்டாம் இடத்தில் உள்ள முகமது அசாருதீன் 221 போட்டிகளில் தலைமை ஏற்று 104 வெற்றிகளைப் பெற்றுத்தந்துள்ளார்.

விராட் கோலி

விராட் கோலி இதுவரை கோலியின் தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி 127 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது. இன்று நடைபெறும் கிரிக்கெட் போட்டியுடன் சேர்த்து 200 போட்டிக்கு விராட் கோலி தலைமை தாங்கியுள்ளார்.

சவுரவ் கங்குலி

4-ம் இடத்தில் உள்ள தாதா சவுரவ் கங்குலி 195 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு இந்திய அணியைத் தலைமை தாங்கியுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version