கிரிக்கெட்

3 விக்கெட் போனாலும் 2 சாதனைகளை செய்த கேப்டன் விராத் கோஹ்லி!

Published

on

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இன்று மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது என்பதும், இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்ததை அடுத்து இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இன்றைய போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா, கேஎல் ராகுல் ம்ற்றும் புஜாரா ஆகிய மூவரும் சொற்ப ரன்களில் அவுட் ஆகியதை அடுத்து தற்போது விராட் கோலி மற்றும் ஜடேஜா ஆகியோர் விளையாடுகின்றனர். இந்திய அணி சற்று முன் 3 விக்கெட் இழப்பிற்கு 54 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இன்றைய போட்டியில் விராத் கோலி 23 ஆயிரம் ரன்களை கடந்த இந்திய வீரர் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்னர் சச்சின் டெண்டுல்கர் 522 இன்னிங்ஸ்களில் 23 ஆயிரம் ரன்களை எட்டிய நிலையில், விராத் கோலியை 490 இன்னிங்ஸ்களில் அதிவேகமாக 23 ஆயிரம் ரன்களை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் 70 சதங்கள், 110 அரை சதங்கள் அடித்துள்ளார் என்பதும் பேட்டிங் சராசரி 55க்கும் மேல் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

மேலும் வெளிநாட்டு அணி ஒன்றுக்கு எதிராக இந்திய அணிக்கு அதிகமுறை தலைமை தாங்கிய கேப்டன் விராட் கோலி தான் என்ற சாதனையையும் செய்துள்ளார். இதற்கு முன்னர் தோனி இங்கிலாந்து அணிக்கு எதிராக 9 முறை கேப்டனாக இருந்த நிலையில், விராட் கோலி அந்த சாதனையை முறியடித்து 10வது போட்டியில் கேப்டனாக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த இரண்டு சாதனையையும் இன்று கேப்டன் விராட் கோலி செய்துள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version