கிரிக்கெட்

செஞ்சுரியன் டெஸ்ட் வெற்றியால் விராத் கோஹ்லிக்கு கிடைத்த பெருமை!

Published

on

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே செஞ்சுரியன் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 117 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதை அடுத்து இந்திய கேப்டன் விராட் கோலி ஒரு சிறப்பு பெருமை கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தென் ஆப்பிரிக்காவில் உள்ள செஞ்சுரியன் மைதானத்தில் கடந்த 26ஆம் தேதி தொடங்கிய முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 327 ரன்கள் எடுத்தது இதனை அடுத்து தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 197 ரன்கள் எடுத்த நிலையில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 174 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற 305 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இந்திய பந்து வீச்சாளர்களின் அபாரமான பந்து வீச்சு காரணமாக 191 ரன்களில் தென் ஆப்பிரிக்க ஆல் அவுட் ஆனது. இதனால் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் இன்னிங்சில் சதம் அடித்த கேஎல் ராகுல் ஆட்டநாயகன் விருதை பெற்றார் என்பதும் இரண்டாவது இன்னிங்சில் மிக அபாரமாக சிராஜ், பும்ரா, அஸ்வின், ஷ்மி ஆகியோர் மிகச் சிறப்பாக விக்கெட்டுகளை எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தென்னாப்பிரிக்க மண்ணில் ஒன்றுக்கும் மேற்பட்ட டெஸ்ட் வெற்றி பெற்ற கேப்டன் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார். முன்னதாக 2018 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவில் டெஸ்ட் போட்டியை வென்ற இந்திய கேப்டன் விராத் கோஹ்லி தற்போது மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version