கிரிக்கெட்

INDvENG – 2வது டெஸ்டில் சண்ட செய்யணும்… தீவிரப் பயிற்சியில் கோலி!

Published

on

இந்தியா – இங்கிலாந்து இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை சென்னை, சேப்பாக்கத்தில் தொடங்குகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்திடம் படுதோல்வியடைந்த இந்தியா, இந்தப் போட்டியில் எப்படியும் வெற்றி பெறும் முனைப்போடு களமிறங்கும்.

இங்கிலாந்தைப் பொறுத்தவரை அணியின் வேகப் பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் 2-வது டெஸ்ட் போட்டியிலிருந்து, காயம் காரணமாக நீக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் மேலும் 3 மாற்றங்களை இங்கிலாந்து அணி நிர்வாகம் செய்துள்ளது. ஜோஸ் பட்லருக்கு அடுத்த 3 டெஸ்ட் போட்டிகளுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக பந்துவீசி இந்திய அணியை அச்சுறுத்திய ஆன்டர்சனுக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சுழலில் கலக்கிய டாம் பெஸ்ஸும் இந்தப் போட்டியில் பங்கேற்க மாட்டார். இவர்கள் 4 பேருக்கும் பதிலாக ஸ்டூவர்ட் பிராட், பென் ஃபோக்ஸ், கிறிஸ் வோக்ஸ், மொயின் அலி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். கடைசி இரு டெஸ்ட் போட்டிகளுக்கு ஆன்டர்ஸன் தயாராக வேண்டும் என்பதால், அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அடுத்துவரும் டெஸ்ட் போட்டிகளில் விக்கெட் கீப்பராக பென் ஃபோக்ஸ் செயல்படுவார். கடைசி இரு டெஸ்ட் போட்டிகளில் ஸ்பெலிஸ்ட் அதிரடி ஜானி பேர்ஸ்டோ அணியில் சேர்க்கப்படுவார்.

இப்படி தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இங்கிலாந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்திய தரப்பிலும் இரண்டாவது போட்டியில் அக்சர் படேல் அல்லது குல்தீப் யாதவ், ஷபாஸ் நதீமுக்கு பதிலாக சேர்க்கப்படுவார் எனத் தெரிகிறது. முதல் போட்டியில் விளையாடிய வேகப் பந்து வீச்சாளர்களுக்கு பதில் வேறு ஒருவர் சேர்க்கப்படவும் வாய்ப்புள்ளது. இந்நிலையில் இந்திய கேப்டன் விராட் கோலி, நாளைய டெஸ்டுக்கு முன்னர் வலைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது எடுத்தப் படங்களை தன் சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.

 

author avatar
seithichurul

Trending

Exit mobile version