கிரிக்கெட்

INDvENG- இங்கி.,க்கு சென்ற ஆட்டநாயகன், தொடர் நாயகன் விருதுகள்- கொதிப்பின் உச்சியில் கோலி ஓப்பன் டாக்!

Published

on

இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று முடிந்தது. இந்தப் போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்ற இந்திய அணி, தொடரையும் 2 – 1 என்ற ரீதியில் கைப்பற்றியது. இதன் மூலம் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட், டி20 மற்றும் ஒருநாள் தொடர்களை இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா, 329 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளை இழந்தது. இந்தியா சார்பில் ரிஷப் பன்ட், அதிகபட்சமாக 78 ரன்கள் குவித்தார். தவான் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோரும் அரைசதங்கள் அடித்தனர்.

இதைத் தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து கடைசி பந்து வரை வெற்றிக்கு அருகில் சென்று தோல்வி கண்டது. அந்த அணி சார்பில் ஆல் ரவுண்டர் சாம் கரன், அதிகபட்சமாக 95 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்தப் போட்டியில் இந்தியாவுக்காக அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார் ஷ்ராதுல் தாக்கூர்.

எனினும் ஆட்ட நாயகன் விருது 95 ரன்கள் எடுத்த சாம் கரணுக்கும் தொடர் நாயகன் விருது இங்கிலாந்து தொடக்க வீரர் ஜானி பேர்ஸ்டோவுக்கு வழங்கப்பட்டன. இதற்கு இந்திய கேப்டன் விராட் கோலி அதிருப்தி தெரிவித்துள்ளார்.

“ஆட்ட நாயகன் விருது ஷர்துல் தாகுருக்கு வழங்கப்படாதது ஆச்சர்யம் அளிக்கிறது. நான்கு விக்கெட்டுகள் எடுத்து பேட்டிங்கில் 30 ரன்களும் எடுத்தார். அதேபோல தொடர் நாயகன் விருதுக்கான போட்டியிலும் புவனேஸ்வர் குமார் இருந்துள்ளார். தொடர் வெற்றிக்கு அவர்கள் இருவரும் முக்கியக் காரணம்” என கொதிப்புடன் கருத்து தெரிவித்துள்ளார் கோலி.

seithichurul

Trending

Exit mobile version