கிரிக்கெட்

இந்தியாவின் படுதோல்விக்கு இது தான் காரணம்: விராட் கோலி விளக்கம்!

Published

on

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 358 என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது. ஆனால் அதனை ஆஸ்திரேலிய அணி அபாரமாக துரத்திப்பிடித்து வெற்றியை வசமாக்கினர்.

இந்த போட்டியில் இந்திய அணியின் இந்த அதிர்ச்சித்தோல்வி குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி விளக்கம் அளித்துள்ளார். பந்துவீச்சு மோசமடைந்ததே இந்த தோல்விக்கு முக்கிய காரணம். பனிப்பொழிவுக்கு மத்தியில் பந்துவீசுவது மிகவும் கடினமானது. இந்த பனிப்பொழிவால் நமது பந்துவீச்சு மோசமடைந்தது.

நமது பந்துவீச்சாளர்கள் சிறப்பாக விளையாட முயற்சித்தனர். எனினும் ஆஷ்டான் டர்னர் நமது பந்துவீச்சை முறியடித்துவிட்டார். ஹண்ட்ஸ்கோம்ப், காவஜா ஆகியோரும் சிறப்பாக பேட்டிங் செய்தனர். டர்னரின் பேட்டிங் ஆட்டத்தின் முடிவை மாற்றிவிட்டது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் சிறந்தவர்கள் என்பதை அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். இந்த வெற்றிக்கு அவர்கள் தகுதியானவர்கள்.

மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் பனிப்பொழிவினால் கேதர் ஜாதவ்வும், விஜய் சங்கரும் பந்துவீச சிரமப்பட்டனர். எனவே இந்தப் போட்டியில் சஹாலை களமிறக்கினோம். ஆனால் இந்த முறையும் பனிப்பொழிவு பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. மேலும் முக்கியமான ஸ்டம்பிங் வாய்ப்பை நாங்கள் தவறவிட்டோம், ஃபீல்டிங்கிலும் தோல்வியடைந்துவிட்டோம். கொண்டாடுவதற்கு எங்களிடம் எதுவுமில்லை. அடுத்தப்போட்டியில் கடினமாக உழைத்து வெற்றிபெற்று தொடரை கைப்பற்ற முயற்சி செய்வோம்.

seithichurul

Trending

Exit mobile version