கிரிக்கெட்

அத்துமீறிய கருத்து: சர்ச்சையில் சிக்கிய விராட் கோலி!

Published

on

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தனது அத்துமீறிய கருத்தால் தற்போது புதிய சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளார். இது கிரிக்கெட் வட்டாரத்திலும், அவரது ரசிகர்கள் மத்தியிலும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி வரும் விராட் கோலியின் பிறந்தநாளையொட்டி கடந்த 5-ஆம் தேதி புதிய செயலி ஒன்றி வெளியிடப்பட்டது. அதன் மூலம் புதிய வீடியோக்களை கோலி வெளியிட்டு வருகிறார். அதில் ஒரு வீடியோவுக்கு இன்ஸ்டாகிராமில் கிரிக்கெட் ரசிகர் ஒருவர் கம்மெண்ட் செய்துள்ளார்.

அந்த கம்மெண்டில், விராட் கோலி மிகையாக மதிப்பிடப்பட்ட பேட்ஸ்மேன். என்னைப் பொறுத்த வரையில் நான் அவரது பேட்டிங்கில் எந்த சிறப்பம்சத்தையும் காணவில்லை. இந்திய வீரர்களைவிட இங்கிலாந்து, ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களின் ஆட்டத்தையே ரசித்துப் பார்க்கிறேன் என கூறியிருந்தார்.

இந்த விமர்சனத்தை தாங்கிக்கொள்ள முடியாத விராட் கோலி, சரி. இதற்குப் பின்னர் நீங்கள் ஏன் இந்தியாவில் இருக்க வேண்டும்? வேறு எந்த நாட்டிற்காகவாவது சென்றுவிடுங்கள். மற்ற நாடுகளை விரும்பிக்கொண்டு இங்கே ஏன் இருக்க வேண்டும்? நீங்கள் என்னை விரும்பாதது பற்றிக் கவலையில்லை. ஆனால் மற்ற நாட்டினரை விரும்பிக்கொண்டு இந்த நாட்டில் வாழ்வதை விரும்பவில்லை. உங்கள் முன்னுரிமைகளைச் சரிசெய்துகொள்ளுங்கள் என்று பதிலளித்துள்ளார்.

விராட் கோலியின் இந்த முதிர்சியற்ற பதில் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திறமையை ரசிப்பதற்கு மத்தியில் அவர் நாட்டுப்பற்றை திணிப்பது ஏற்புடையது அல்ல. அப்படியென்றால் இந்தியாவில் இடமில்லை என்றா விராட் கோலி தனது திருமணத்தை இத்தாலியில் நடத்தினார். பிறகு ஏன் விராட் கோலி இந்தியாவில் இருக்க வேண்டும், வேறு எந்த நாட்டிற்காவது செல்லலாமே என கேள்வி எழுகிறது. இந்திய குடிமகன் ஒருவரை நாட்டைவிட்டு வெளியேற அறிவுறுத்துவதற்கு விராட் கோலிக்கு எந்த தகுதியும், உரிமையும் இல்லை. இதுபோன்ற முதிர்சியற்ற வார்த்தைகளை வரும் காலங்களில் விராட் கோலி தவிர்க வேண்டும்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version