கிரிக்கெட்

“ஒரு நாள் கூட ரெஸ்ட் கிடையாது!”- IPLக்கு பயிற்சியை ஆரம்பித்த விராட் கோலி

Published

on

இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று முடிந்தது. இந்தப் போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்ற இந்திய அணி, தொடரையும் 2 – 1 என்ற ரீதியில் கைப்பற்றியது. இதன் மூலம் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட், டி20 மற்றும் ஒருநாள் தொடர்களை இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா, 329 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளை இழந்தது. இந்தியா சார்பில் ரிஷப் பன்ட், அதிகபட்சமாக 78 ரன்கள் குவித்தார். தவான் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோரும் அரைசதங்கள் அடித்தனர்.

இதைத் தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து கடைசி பந்து வரை வெற்றிக்கு அருகில் சென்று தோல்வி கண்டது. அந்த அணி சார்பில் ஆல் ரவுண்டர் சாம் கரன், அதிகபட்சமாக 95 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்தப் போட்டியில் இந்தியாவுக்காக அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார் ஷ்ராதுல் தாக்கூர்.

நேற்று இங்கிலாந்துக்கு எதிரான மிக நீண்ட கிரிக்கெட் தொடர் முடிவடைந்த நிலையில், அடுத்த ஐபிஎல் தொடருக்காக கவனம் செலுத்தி வருகின்றனர் இந்திய கிரிக்கெட் வீரர்கள். இருப்பினும் சிலர், ஒரு சில நாட்கள் ஓய்வு எடுத்துக் கொண்டுத் தங்களது பயிற்சியை ஆரம்பிக்கத் திட்டமிட்டு உள்ளனர். ஆனால், இந்திய கேப்டன் விராட் கோலி அப்படி இல்லை. அவர் ஐபிஎல்-க்கான தனது வெறித்தனமான பயிற்சியை ஆரம்பித்துள்ளார்.

இது குறித்து டிரெட்மில்லில் ஓடி பயிற்சி எடுத்த வீடியோவை ட்விட்டரில் பதிவிட்ட கோலி, ‘ரெஸ்ட் நாட்கள் கிடையாது. இங்கிருந்து இனி வேகத்துக்குத் தான் முக்கியத்துவம் #IPL’ என்று குறிப்பிட்டுள்ளா்.

seithichurul

Trending

Exit mobile version