கிரிக்கெட்

INDvENG- மூன்று போட்டிகளில் வெறும் 1 ரன் எடுத்த கே.எல்.ராகுல்: என்ன சொல்கிறார் கோலி?

Published

on

இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் நேற்று நடந்த மூன்றாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி, அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து, 2 – 1 என்ற ரீதியில் முன்னிலை வகிக்கிறது. 

நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 156 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் கோலி, 77 ரன்கள் குவித்தார். இதைத் தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி, ஆரம்பம் முதலே அதிரடி காண்பித்தது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட இலக்கைர 18.2 ஓவர்களில் அடைந்தது. 

இந்தியாவைப் பொறுத்தவரை மூன்று ஆட்டங்களிலும் சரியான ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் என்பது அமையவில்லை. இதனால் தொடக்கம் முதலே இந்திய அணி தடுமாறி வருகிறது. மூன்று போட்டிகளிலும் ஓப்பனர்களில் ஒருவராக களமிறங்கியது கே.எல்.ராகுல். இரண்டு போட்டிகளில் டக்-அவுட் ஆகியுள்ள ராகுல், ஒரு போட்டியில் மற்றும் ஒரு ரன் எடுத்தார். இதனால் அவர் மீது விமர்சனங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக ஐபிஎல் தொடரில் கலக்கிய சூர்யகுமார் யாதவுக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்கிற குரல்கள் எழுந்து வருகின்றன. 

இந்நிலையில் ராகுலின் ஃபார்ம் குறித்தும், அடுத்தப் போட்டியில் அவர் இருப்பாரா என்பது குறித்தும் கேப்டன் கோலி, ‘எங்கள் அணியின் மிகச் சிறந்த வீரர்களில் ஒருவராக இருப்பவர் ராகுல். அவர் ரோகித்துடன் இணைந்து தொடர்ந்து சாதிப்பார்’ என்று மட்டும் சூசக பதிலைத் தெரிவித்துள்ளார். 

Trending

Exit mobile version