கிரிக்கெட்

ரோஹித் சர்மா நீக்கமா? கேள்வி கேட்ட நிருபரை வறுத்தெடுத்த விராத் கோஹ்லி!

Published

on

நேற்று நடைபெற்ற உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய நிலையில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் படு மோசமாக தோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த தோல்வியை அடுத்து பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது என்பதும் விராத் கோலி உள்பட அணியில் உள்ள வீரர்கள் அனைவரையும் கடுமையாக நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்றைய போட்டி முடிந்ததும் விராத் கோலி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பல கேள்விகளுக்கு பொறுமையுடன் அவர் பதிலை அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நிருபர் ஒருவர் ’இந்த தோல்வி காரணமாக தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக இஷான் கிஷான் அணியில் சேர்க்கப்படுவாரா என்ற கேள்வியை எழுப்பினார்.

இந்த கேள்வியால் கடும் அதிர்ச்சி அடைந்த விராட்கோலி ’நீங்கள் புரிந்து கொண்டு தான் பேசி இருக்கிறீர்களா என்று எனக்கு தெரியவில்லை. ரோகித் சர்மா வார்ம் அப் போட்டியில் எப்படி விளையாடினார் என்பதை நீங்கள் பார்க்கவில்லையா? சர்ச்சைக்குரிய கேள்விகள் கேட்க வேண்டும் என்று உங்களுக்கு விருப்பமாக இருந்தால் முன்கூட்டியே சொல்லி விடுங்கள். நான் அதற்கேற்றவாறு பதிலை தயார்படுத்திக் கொள்கிறேன் என்று பதிலடி கொடுத்தார். இதுகுறித்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version