கிரிக்கெட்

INDvENG- டி20 தொடருக்கு முன்னர் வெறித்தனமான பயிற்சியில் ஈடுபடும் கோலி; வைரல் வீடியோ

Published

on

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற இந்தியா, தொடரையும் 3 – 1 என்ற ரீதியில் கைப்பற்றி சாதனைப் படைத்தது. இந்த வெற்றியின் மூலம் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளது இந்தியா.

அடுத்ததாக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இங்கிலாந்துக்கு எதிராக விளையாட இருக்கிறது. இந்தத் தொடரின் முதல் போட்டி நாளை ஆரம்பிக்கிறது. இந்தத் தொடரின் அனைத்துப் போட்டிகளும் குஜராம் மாநிலத்தில் இருக்கும் அகமதபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் தான் நடைபெறுகிறது. இதையடுத்து இந்திய அணியினர் தீவிரப் பயிற்சி எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் டி20 போட்டிகளுக்காக தான் எடுத்து வரும் தீவிரப் பயிற்சி குறித்தான காணொலியை அணியின் கேப்டன் விராட் கோலி, தன் சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் ஆக்ரோஷமாக பேட்டிங் செய்யும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. டெஸ்ட் போட்டிகளில் டிஃபன்ஸ் மிக முக்கியம் என்று சொல்லப்படும் நிலையில், டி20 அதிரடி காட்டுவது அவசியம்.

வீடியோவுடன் கோலி, ‘புதிய வாரம், புதிய ஃபார்மட், புதிய இலக்கு. சாதிப்போம்’ என்று பதிவிட்டுள்ளார்.

 

seithichurul

Trending

Exit mobile version