கிரிக்கெட்

வலியில் துடித்த இங்கி., கேப்டன் ஜோ ரூட்… மசாஜ் கொடுத்து உதவிய கோலி..!- வைரல் வீடியோ

Published

on

இந்தியா- இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடந்தது.

டெஸ்ட் போட்டியில் முதல் நாளான இன்றே இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் சதம் விளாசி இங்கிலாந்து அணியை வலுவான நிலைக்கு தூக்கிச் சென்றுள்ளார். 128 ரன்கள் விளாசிய ஜோ ரூட் இன்றைய போட்டியின் நடுவே திடீரென தசை பிடிப்பின் காரணமாக மைதானத்திலேயே சுருண்டு விழுந்தார்.

அப்போது இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி வேகமாக ஓடி வந்து அவரது தசை பிடிப்புக்கான முதலுதவியை வழங்கினார். கோலி ஜோ ரூட்-க்கு நன்றாக மசாஜ் கொடுத்தார். இதுதான் ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப் என சமுக வலைதளங்களில் நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். இதுகுறித்து பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுப் பாராட்டி உள்ளது. இந்த வீடியோ தான் தபோது சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Trending

Exit mobile version