டிவி

’தோத்துட்டேன் மச்சான்…’ போனில் நண்பரிடம் பகிரும் சோம் சேகர்- வீடியோவால் உருகும் ரசிகர்கள்

Published

on

பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியின் மூலம் பல ரசிகர்களைக் கவர்ந்தவர் சோம் சேகர்.

சோம் சேகர் பிக்பாஸ் இறுதி நாள் நிறைவு நிகழ்ச்சியின் போது கடைசியாக இருந்த டாப் 5 போட்டியாளர்களுள் ஒருவராக இருந்தார். நிகழ்ச்சி முடிந்த பின்னர் கேரவன் வண்டியில் நண்பரிடம் சோம் சேகர் தான் தோற்றதை பகிரும் வீடியோ காட்சி தற்போது சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கேரவனில் நண்பரிடம் போன் போட்டு தான் தோற்றுவிட்டதாகக் கூறுகிறார் சோம் சேகர். இதை யதார்த்தமாக கேரவனில் இருந்து மற்றொரு நண்பர் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ தான் தற்போத் சமுக வலைதளங்களில் வெளியாகி சோம் சேகரின் மதிப்பை இன்னும் உயர்த்தி உள்ளதாக ரசிகர்கள் கருத்துப் பகிர்ந்து வருகின்றனர். மேலும், பிக்பாஸ் தமிழ் 4 நிகழ்ச்சியின் கூல் போட்டியாளரே சோம் என்றும் பாராட்டுத் தெரிவித்தும் வருகின்றனர்.

Trending

Exit mobile version