சினிமா

வைரல் புரட்சி செய்யும் ‘ஒரு விரல் புரட்சி’!

Published

on

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிக்கும் சர்க்கார் படத்தின் இரண்டாவது சிங்கிள் நேற்று மாலை 6 மணிக்கு சன் டிவி மற்றும் சன் நெக்ஸ்ட் ஆப்பில் வெளியிடப்பட்டது.

ஏ.ஆர். ரஹ்மான் இசையில், விவேக் பாடல் வரிகளில், வெளியான முதல் சிங்கிள் சிம்டாங்காரனுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பும், விமர்சகர்கள் மத்தியில் கடும் விமர்சனங்களும் கிளம்பின. இதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று வெளியான ‘ஒரு விரல் புரட்சி’ சினிமா ரசிகர்கள், பிரபலங்கள், விமர்சகர்களின் பாராட்டு மழையில் நனைந்து ஒரு புதிய புரட்சியே செய்து வருகிறது. ‘ஆளப்போறான் தமிழன்’ பாடலை எழுதிய விவேக், எழுதிய ‘ஒரு விரல் புரட்சி’ பாடல் வரும் தேர்தல் நேரத்தில் தேர்தல் ஆணையத்தால், பயன்படுத்தப்பட்டாலும், ஆச்சர்யம் இல்லை என்ற ரகத்துக்கு அருமையாக உள்ளது.

”நேத்து வரை ஏமாளி, இன்று முதல் போராளி” எனத் தொடங்கும் ஒரு விரல் புரட்சியே பாடல், ஓட்டுக்கு காசு வாங்கும் மக்களுக்கும், ஆட்சியில் அமர்ந்து கொண்டு மிச்சர் சாப்பிடும் அரசியல் வாதிகளுக்கும் சாட்டை அடியாக அமைந்துள்ளது.

நாளை (அக்.2) படத்தின் மொத்த ஆல்பமும் மாலை 6.30 மணிக்கு நேரலை நிகழ்ச்சியின் மூலம் ரிலீசாகிறது.

seithichurul

Trending

Exit mobile version