உலகம்

“நம்புங்கள்… இது Dog!”- ரஷ்யாவில் ஏற்பட்ட வினோத விபத்தால் நிறம் மாறிய நாய்கள்

Published

on

ரஷ்ய நாட்டில் நீல நிறத்தில் கும்பலாக சுற்றும் நாய்களின் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. நாய்களின் நிற மாற்றத்துக்குக் காரணம் ஒரு வினோத விபத்து எனப்படுகிறது.

பல மர்மங்கள் அடங்கிய நாடு ரஷ்யா. பெரும்பாலும் பனிப் பிரதேசங்களால் சூழப்பட்டிருக்கும் ரஷ்யாவில் உள்ள விலங்குகள் எப்போதும் தனி ரகமாகத் தான் இருக்கும். அந்த வகையில் சமீபத்தில் நீல நிறத்தில் கும்பலாக ஒரு நாய்க் கூட்டம் சுற்றித் திரிந்து கொண்டிருந்தது. இதைப் பார்த்தவர்கள் ஆச்சரியப்பட்டு, அந்த நாய்களைப் புகைப்படம் எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ளனர்.

அது உலக வைரலாக மாறியுள்ளது. பொதுவாக நாய்கள், நீல நிறத்தில் இருக்க வாய்ப்பில்லாத காரணத்தினால், இந்தப் படங்கள் பலரால் ஆச்சரியத்துடனும் அதிர்ச்சியுடனும் பகிரப்பட்டு வருகிறது.

இந்த நாய்கள் இருக்கும் சேர்ஷிங்க் மாகாணத்தில் எதாவது தொழிற்சாலைகள் மூலம் வேதியல் மாற்றம் ஏற்பட்டிருக்கலாம் என்றும், குறிப்பாக காப்பர் சல்ஃபேட் இந்த நாய்கள் மீது பட்டு, அதனால் இந்த நிற மாற்றம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் தகவல் சொல்லப்படுகிறது. எது எப்படியோ, ஒரு நாய்க்கு அப்படி மாறியிருந்தால் பரவாயில்லை, எப்படி அங்கிருக்கும் அனைத்து நாய்களும் இப்படி மாறியுள்ளன என நெட்டிசன்கள் கேட்கும் கேள்விக்கு யாரிடமும் பதில் இல்லை.

 

 

author avatar
seithichurul

Trending

Exit mobile version