பிற விளையாட்டுகள்

இந்திய வீரரின் வெண்கலப்பதக்கம் திடீர் பறிப்பு: அதிர்ச்சி தகவல்!

Published

on

வட்டு எறிதல் போட்டியில் இந்திய வீரர் வெண்கல பதக்கம் வென்ற நிலையில் அந்த பதக்கம் திரும்ப பெறப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர்கள் வீராங்கனைகள் பதக்கத்தை குவித்து வருகின்றனர் என்பது தெரிந்ததே. இன்று ஒரே நாளில் இந்தியாவுக்கு ஒரு தங்கம், 2 வெள்ளி மற்றும் ஒரு வெண்கலம் என மொத்தம் நான்கு பதக்கங்கள் கிடைத்தது என்பது ஒட்டுமொத்தமாக இந்தியாவுக்கு இதுவரை பாரா ஒலிம்பிக் போட்டிகளில் 7 பதக்கங்கள் கிடைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்ற வினோத்குமார் என்பவருக்கும் பதக்கம் இல்லை என ஒலிம்பிக் குழுவினர் அறிவித்துள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வட்டு எறிதல் போட்டியில் வெண்கலம் வென்றதாக அறிவிக்கப்பட்ட இந்திய வீரர் வினோத்குமார் மாற்றுத்திறனாளிக்கான மதிப்பீட்டில் தேர்ச்சி அடையவில்லை என்றும் அதனால் அவருடைய பதக்கம் திரும்பி பெறப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சோதனை அனைத்தும் போட்டிகள் தொடங்கும் முன்னரே செய்திருக்க வேண்டும் என்றும் போட்டி தொடங்கி அதில் வெற்றிபெற்று பதக்கம் வென்ற பின் சோதனை செய்து பதக்கத்தை பறிப்பது ஒலிம்பிக் அமைப்பிற்கு தான் இழுக்கு என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மாற்றுத்திறனாளிக்கான மதிப்பீட்டில் தேர்ச்சி அடையாத ஒருவரை எப்படி போட்டியில் பங்கேற்க அனுமதித்தீர்கள் என்றும் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

seithichurul

Trending

Exit mobile version