ஆட்டோமொபைல்

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

Published

on

வியட்நாமை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் வின்ஃபாஸ்ட் எலக்ட்ரிக் கார் நிறுவனம், தமிழ்நாட்டில் 2 பில்லியன் அமெரிக்க டாலர், இந்திய மதிப்பில் 16,638 கோடி ரூபாய் முதலீட்டில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலையை அமைக்க, தமிழ்நாட்டு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளது. முதற்கட்டமாக அதிலிருந்து 500 மில்லியன் டாலர், இந்திய ரூபாய் மதிப்பில் 4160 கோடி ரூபாயை முதலீடு செய்யப்பட உள்ளது.

தமிழ்நாட்டின், தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த எலக்ட்ரிக் உற்பத்தி ஆலையால், 3000 முதல் 3500 வேலைவாய்ப்புகள் வரை கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆலையில் ஆண்டுக்கு 1,50,000 கார்களை உற்பத்தி செய்ய வின்ஃபாஸ்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது. 2024-ம் ஆண்டு இறுதிக்குள் கட்டுமான பணிகளைச் செய்ய உள்ளது.

இதனால் தமிழ்நாடு பொருளாதார ரீதியாகப் பயனடைவது மட்டுமல்லாமல், 30% புதிய வாகனப் பதிவுகள் எலக்ட்ரிக்காக இருக்க வெண்டும் என்ற இலக்கை அடைவது, கார்பன் உமிழ்வைக் குறைப்பது போன்றவற்றுக்கு இது பெரும் பங்கை வகிக்கும்.

தமிழ்நாடு அரசு இப்போது அதற்கான நிலங்களை வழங்குவது, மின்சாரம், தண்ணீரில் உள்ளிட்ட தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தரும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

மறுபக்கம், இந்தியா முழுவதும் வின்ஃபாஸ்ட் கார்களை விற்பதற்கான டீலர்களை தேர்வு செய்யும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்று வரும் நிலையில், வின்ஃபாஸ்ட் நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது முக்கிய அறிவிப்பாகப் பார்க்கப்படுகிறது.

author avatar
Tamilarasu

Trending

Exit mobile version