ஆன்மீகம்

அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்!

Published

on

ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி அன்று தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ஆவணி 25 ஆம் தேதி அதாவது செப்டம்பர் 10ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு வருகிறது.

நாடு முழுவதும் இந்து மக்களால் கொண்டாடப்படும் இந்த பண்டிகையை மிகப்பெரிய பண்டிகையாக பார்க்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. விநாயகர் சதுர்த்தி அன்று நண்பர்கள் உறவினர்கள் ஆகியோருடன் இணைந்து களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் வீடு அல்லது பொது இடத்தில் வைத்து வழிபடுவது வழக்கமாக உள்ளது. ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகம் உள்பட பல மாநிலங்களில் விநாயகரை பொது இடத்தில் வைத்து வழிபட தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் விநாயகர் சதுர்த்தி தினத்தில் அனைவரும் வீடுகளில் விநாயகரை வைத்து வழிபட்டு வருகின்றனர் என்பதும் விநாயகர் கோவிலுக்கு சென்று வழிபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. விநாயகருக்கு மிகவும் பிடித்த அருகம்புல், கொழுக்கட்டை மற்றும் சுண்டல் ஆகியவற்றை படைத்து களிமண்ணால் செய்த விநாயகரை வணங்கினால் விநாயகர் அருள் நமக்கு கிடைக்கும்.

மேலும் விநாயகரின் வாழ்த்துப் பாடல்களையும் பாடி அவரை மகிழ்விக்கலாம். விநாயகர் நமது ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் அறிவூட்டி கொண்டே இருப்பவர், நம்மை ஆசீர்வதிப்பவர், நமது குடும்பத்திற்கு நல்லது செய்பவர், வாழ்க்கையில் எந்த சிக்கல்கள் தடைகள் வந்தாலும் அதை நீக்குபவர்.

எனவே அவரை இன்றைய சதுர்த்தி தினத்தில் விநாயகரை வழிபட்டால் பல்வேறு பலன்களை பெறலாம். விநாயகர் சதுர்த்தியன்று விநாயகரை வழிபட்டு அவரது பாடல்களை பாடினால் வீட்டில் மகிழ்ச்சி செழிப்பு மற்றும் மன அமைதி ஆகியவை நிரம்பும், வீட்டில் செல்வ செழிப்பு மற்றும் அதிர்ஷ்டம் பெற வேண்டுமானால் மனதார விநாயகர் துதி பாட வேண்டும். நமது துக்கங்களை அழிக்கவும், மகிழ்ச்சியை மேம்படுத்தவும், நம்மை சுற்றியுள்ள தீமைகளை நீக்கவும் விநாயகர் அருள் புரிவார். அனைத்து தடைகளையும் நீக்கும் விநாயகரை கீழ்க்கண்ட பாடலை பாடி அனைவரும் வணங்குவோம்.

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியேநீ யெனக்குச்
சங்கத் தமிழ் மூன்றுந்தா

அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்!

Trending

Exit mobile version