சினிமா செய்திகள்

விமலின் கன்னிராசி டிரைலர் ரிலீஸ்!

Published

on

இயக்குநர் முத்துகுமரன் இயக்கத்தில் விமல், வரலஷ்மி சரத்குமார் நடிப்பில் உருவாகியுள்ள கன்னிராசி படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

இப்படியெல்லாம் ஒரு படம் எப்போது எடுத்தாங்க என்ற கேள்வி டிரைலர் பார்க்கும் அனைவருக்கும் வரும்படி அந்த டிரைலர் உள்ளது. அதை நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்,

ரோபோ சங்கர், யோகிபாபு காமெடி செய்கிறேன் என்ற பேர் வழிக்கு பேசும் வசனங்கள் டிரைலரிலேயே இத்தனை போர் அடிக்கிறதென்றால், தியேட்டரில் போய் பார்ப்பவன் நிலைமை என்ன ஆகும் என்றே தெரியவில்லை.

வரலஷ்மி சரத்குமார் நடித்து பல படங்கள் ஓடவில்லை என்றாலும், அவரது நடிப்பின் தனித்துவம் தனியாகவே தெரியும்.

ஆனால், டிரைலரில் அப்படியொரு காட்சியை பார்த்ததாக தெரியவில்லை. உங்களுக்கு தெரிந்தால், பார்த்துவிட்டு கமெண்ட் செய்யவும், விமலின் இஷ்டம் பட வரிசையில் இந்த படமும் அமையாமல் இருந்தால் சரி.

seithichurul

Trending

Exit mobile version