ஆரோக்கியம்

கிராமத்து சுவையில் மணக்கும் கருவாட்டு குழம்பு!

Published

on

கிராமத்து ஸ்டைலில் கருவாட்டு குழம்பு செய்முறை:

நம்ம ஊர் கிராமத்துல செய்யுற மாதிரி, நல்லெண்ணெயில வதக்கி, கருவாட்டுல இருந்து வரும் சுவையோட, அட்டகாசமா செய்யற கருவாட்டு குழம்பு செய்றது எப்படின்னு இந்த நிகழ்ச்சியில பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

கருவாடு – தேவையான அளவு
சின்ன வெங்காயம் – 25 (நறுக்கியது)
தக்காளி – 2 (பொடியாக நறுக்கியது)
பூண்டு – 15
புளி – சிறிதளவு (நெல்லிக்காய் அளவு)
மிளகாய் தூள் – 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
கொத்தமல்லி தூள் – 1 ஸ்பூன்
கடுகு – 1 ஸ்பூன்
வெந்தயம் – 1 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
நல்லெண்ணெய், தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை:

  • ஒரு வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
  • கடுகு, வெந்தயம், உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  • பூண்டு மற்றும் நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  • வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வந்ததும், பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கவும்.
  • தக்காளி நன்கு வதங்கியதும், மிளகாய் தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  • கரைத்த புளிக்கரைசல் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
  • ஒரு தட்டை வைத்து மூடி வேக வைக்கவும்.
  • மற்றொரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி சூடாக்கி, கருவாட்டை வறுக்கவும்.
  • 10 நிமிடங்கள் கழித்து, வேக வைத்த குழம்பில் வறுத்த கருவாட்டை சேர்க்கவும்.
  • தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
  • எண்ணெய் பிரிந்து வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
    குறிப்புகள்:

* உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப காரம் மற்றும் புளிப்பு அளவை சரிசெய்யவும்.
* வேக வைக்கும் போது, ​​அடிக்கடி கிளறி விடவும்.
* கூடுதல் சுவைக்கு, வறுத்த கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி தழைகளை தூவலாம்.
* இந்த குழம்பு சாதம், இட்லி, தோசை அல்லது அப்பத்துடன் சேர்த்து பரிமாறலாம்.

author avatar
Poovizhi

Trending

Exit mobile version