சினிமா செய்திகள்

விக்ரம் சென்ற விமானத்தில் பிரச்சனை: அதிர்ச்சியில் ரசிகர்கள்

Published

on

தமிழ் திரையுலகின் மாஸ் நடிகர்களில் ஒருவரான விக்ரம் சென்ற விமானத்தில் திடீர் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விக்ரம், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் ’சியான் 60’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விக்ரம் மகன் துருவ் விக்ரம் முதல் முதலாக இணைந்து நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

விக்ரம் இந்த படத்தில் வில்லனாகவும் துருவ் விக்ரம் இந்த படத்தில் ஹீரோவாகவும் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் இறுதி கட்ட படப்பிடிப்பை டார்ஜிலிங் பகுதியில் நடத்த இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் திட்டமிட்டார்.

இதற்காக கடந்த வெள்ளிக்கிழமை படக்குழுவினர் மொத்தம் 100க்கும் மேற்பட்டவர்கள் சென்னையிலிருந்து கிளம்பி சென்றனர். விக்ரம், துருவ் விக்ரம், கார்த்திக் சுப்புராஜ் உள்பட படக்குழுவினர் சென்ற அந்த விமானம் திடீரென நடுவானில் கோளாறானது. இதனை அடுத்து விமானிகள் மீண்டும் விமானத்தை சென்னைக்குத் திரும்பினர். தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் டார்ஜிலிங் செல்லவில்லை என்றும் அதனால் சென்னை திரும்பியதாகவும் பயணிகளுக்கு அறிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து மறுநாள் சனிக்கிழமை விக்ரம் உட்பட ’சீயான் 60; படக்குழுவினர் வேறு விமானத்தில் டார்ஜிலிங் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த படம் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version