சினிமா செய்திகள்

என்னடா இது மலேசியாவில் விக்ரம் படத்திற்கு வந்த சோதனை?

Published

on

கபாலி, இருமுகன் என மலேசியாவை மையப்படுத்தி பல படங்கள் வெளியாகி உள்ளன. கபாலி படத்திலும், மலேசியாவில் அதிகளவில் போதை பொருள் கடத்துவது குறித்த காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தாலும், அந்த படம் மலேசியாவில் ரிலீசாகி நல்ல வசூலை ஈட்டியது.

ஆனால், கடாரம் கொண்டான் படத்தை மலேசியாவில் ரிலீஸ் செய்ய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

விக்ரம் நடிப்பில் வெளியான இருமுகன் திரைப்படமும் மலேசியாவில் ரிலீசான நிலையில், கடாரம் கொண்டான் படத்தில் மலேசிய போலீசார் குறித்த அவதூறு காட்சிகள் அதிகம் இருந்ததாலும், படத்தின் வில்லனே மலேசிய போலீஸ் என்பதாலும், படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

மேலும், மலேசியாவில் கடாரம் கொண்டான் படம் வெளியாகததால், சுமார் 5 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version