சினிமா செய்திகள்
அஜித் படத்தில் இணைந்த ஷ்ரத்தா!
விக்ரம் வேதா படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்து ‘யாஞ்சி யாஞ்சி’ பாடலின் மூலம் தமிழக ரசிகர்கள் நெஞ்சில் குடிகொண்ட கன்னட நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத், தற்போது எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ள பிங்க் ரீமேக்கில் இணைந்துள்ளார்.
இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை வித்யா பாலன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. பிங்க் படத்தில் நடிகை டாப்ஸி நடித்த முக்கிய வேடத்தில் தான், தமிழில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் இவர், அஜித்துக்கு ஜோடி இல்லை என்றாலும், இவரை மையமாக வைத்துத்தான் படமே நகரும் என்பதால், ஷ்ரத்தாவுக்கு ஹேப்பி தான்.
இந்த செய்தியை அதிகாரப்பூர்வமாக ட்விட்டரில் பகிர்ந்து கொண்ட ஷ்ரத்தா ஸ்ரீநாத்துக்கு நடிகை டாப்ஸி வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், இந்த படத்தின் மூலம் தனக்கு கிடைத்த புகழ் உங்களுக்கும் கிடைக்க வாழ்த்துகள் என டாப்ஸி அந்த ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.