சினிமா செய்திகள்

விக்ரம் டு விக்ரம் 36 வருட இடைவெளி: வைரல் புகைப்படம்

Published

on

உலகநாயகன் கமலஹாசன் நடித்த விக்ரம் திரைப்படம் கடந்த 1986ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் தேதி வெளியான நிலையில், இந்தப் படம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் சுஜாதா கதை வசனத்தில் உருவாக்கப்பட்ட இந்த படம் 8 கோடியில் தயாரான நிலையில் மிகப்பெரிய லாபத்தை கமலஹாசனுக்கு கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது .

இந்த நிலையில் அதே டைட்டிலில் 36 வருடங்கள் கழித்து கமல் ஹாசன் நடித்துள்ள விக்ரம் திரைப்படம் கிட்டத்தட்ட அதே நாளில் வெளியாக உள்ளது. 36 வருட இடைவெளியில் வேறொரு நடிகர் என்றால் மிகப் பெரிய உருவ மாற்றம் இருந்திருக்கும்.

ஆனால் கமல்ஹாசன் 36 வருட இடைவெளியிலும் கிட்டத்தட்ட அதே போன்று இருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சற்றுமுன் விக்ரம் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ள நிலையில் 1986ஆம் ஆண்டு வெளியான விக்ரம் படம் போஸ்ட் போலவே இந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது ஆச்சரியத்தை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், ஷிவானி நாராயணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வருகிறது என்பதும் இந்த படத்தை ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிட உள்ளது என்பது தெரிந்ததே.

 

seithichurul

Trending

Exit mobile version