சினிமா செய்திகள்

விக்ரமின் மகன் என்பதை நிரூபிக்கும் த்ரூவ்..!

Published

on

நீர் விக்ரமின் மகன் என்பதை மணிக்கு ஒரு முறை நிரூபித்துக் கொண்டிருக்கிறாய் என்று தான் சொல்ல வேண்டும். அப்படி என்ன செய்தார் த்ரூவ்?

நடிகர் விக்ரமின் மகன் த்ரூவ் தற்போது மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்தப் படம் ஸ்போர்ட்ஸ் சம்பந்தப்பட்ட படமாகும். இதற்காக உடல் கச்சிதமாக்கம் முயற்சியில் த்ரூவ் இறங்கியுள்ளார். கடும் உடற்பயிற்சி மேற்கொண்டு, உடம்பை வருத்திக் கொண்டு இருக்கிறார் த்ரூவ்.

அப்பா விக்ரம் பற்ற அனைவருக்கும் தெரியும். எந்தப் படமாக இருந்தாலும், கதாபாத்திற்கு ஏற்ப, உடல் எடையைக் கூட்டுவதும், குறைப்பதுமாகவே இருப்பார். தற்போது அவரது மகனும் அதே போன்று உடல் எடையைக் கூட்டி, மெருகேற்றி வருகிறார்.

த்ரூவ் கடுமையாக உடற்பயிற்சி செய்யும் புகைப்படம் சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. விக்ரமின் மகனாச்சே, படத்திற்காக இது கூட பண்ணவில்லை என்றால் எப்படி, விக்ரமின் ரத்தம் த்ரூவ் உடம்பிலும் ஒடுகிறதல்லவா என்று நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version