சினிமா செய்திகள்

‘புலி குட்டி பாண்டி’-க்காக மீண்டும் இணையும் ‘கும்கி’ ஜோடி..!

Published

on

நடிகர் விக்ரம் பிரபுவின் அடுத்தத் திரைப்படத்துக்கு புலிகுட்டி பாண்டி எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் விக்ரம் பிரபுக்கு ஜோடியாக நடிகை லக்‌ஷ்மி மேனன் நடித்துள்ளார். விக்ரம் பிரபு மற்றும் லக்‌ஷ்மி மேனன் ஆகிய இருவரும் தங்களது முதல் படமான கும்கி திரைப்படத்துக்குப் பின்னர் தற்போது மீண்டும் இணைந்துள்ளனர்.

இயக்குநர் முத்தையா

இத்திரைப்படத்தை புலிகுட்டி, கொம்பன், மருது ஆகிய படங்களை இயக்கிய முத்தையா இயக்குகிறார். நீண்ட இடைவெளிக்குப் பின் லக்‌ஷ்மி மேனன் மீண்டும் திரையில் தோன்ற தயாராக உள்ளாராம். வருகிற ஜனவரி 1-ம் தேதி புத்தாண்டு தினம் அன்றே இத்திரைப்படத்தை திரை அரங்குகளில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனராம். 2021-ம் ஆண்டு வெளியாகும் முதல் படமாக இருக்க வேண்டும் என்றும் தயாரிப்புத் தரப்பினர் எண்ணுவதாகக் கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version