சினிமா செய்திகள்

’விக்ரம்’ படத்தின் அட்டகாசமான போஸ்டரை வெளியிட்ட லோகேஷ்!

Published

on

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து வரும் ’விக்ரம்’ படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளதை அடுத்து அந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில், ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’விக்ரம்’.

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது என்பதும் சென்னை, காரைக்குடி உள்ளிட்ட இடங்களில் நடந்த படப்பிடிப்பு தற்போது நிறைவு கட்டத்தை நெருங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நவம்பர் 7ஆம் தேதி கமல்ஹாசன் தனது பிறந்தநாளை கொண்டாட உள்ளதை அடுத்து கமல்ஹாசனின் பிறந்த நாள் ட்ரீட்டாக சற்றுமுன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் ’விக்ரம்’ படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளார். அட்டகாசமாக உள்ள இந்த போஸ்டர் தற்போது இணையதளங்களில் வைரலாக என்பது குறிப்பிடத்தக்கது.

ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியாக கமல்ஹாசனும், கடத்தல் குழு தலைவராக விஜய் சேதுபதியும், விஞ்ஞானியாக பகத் பாசிலும் இந்த படத்தில் நடித்து வருகின்றனர் என்பதும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக பிக்பாஸ் ஷிவானி நாராயணன் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version