சினிமா

அடிச்சி தூக்கிய விக்ரம் பட வியாபாரம்! – கமல் படத்திலேயே இதுதான் அதிகமாம்!…..

Published

on

கமல்ஹாசன் நடித்து வரும் ‘விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது என்றும், முதல்கட்ட படப்பிடிப்பில் கமலஹாசன் மற்றும் விஜய் சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகளும் அடுத்தகட்ட படப்பிடிப்பில் கமலஹாசன் மற்றும் பகத் பாசில் சம்பந்தப்பட்ட காட்சிகளும் படமாக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

இந்த படத்தில் விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், நரேன் உள்ளிட்ட பிரபலங்கள் இருக்கும் நிலையில் காளிதாஸ் ஜெயராம் கமல்ஹாசனின் மகனாக நடிக்க உள்ளார். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். இப்படத்தில் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியாக கமல்ஹாசனும், விஞ்ஞானியாக பஹத்பாசிலும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடிக்கவுள்ளனர். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்கவுள்ளது.

கமல்ஹாசன், லோகேஷ் கனகராஜ், விஜய் சேதுபதி, பஹத் பாசில் என மெகா கூட்டணி இப்படத்திற்காக இணைவதால் படத்தின் வியாபாரமும் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. அதிலும், இப்படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமை மட்டும் ரூ.35 கோடிக்கு கேட்கப்பட்டு வருகிறதாம். கமல்ஹாசன் நடித்த படத்திலேயே இந்த அளவுக்கு ஹிந்தி டப்பிங் உரிமை விலை போனதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version