சினிமா செய்திகள்

நீண்ட இடைவெளிக்குப் பிறகுக் கிராமத்துக் கதையில் விக்ரம்.. இயக்குநர் யார் தெரியுமா?

Published

on

நீண்ட இடைவெளிக்குப் பிறகு விக்ரம் கிராமத்துக் கதையில் நடிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடைசியாக 2005-ம் ஆண்டு வெளியான மஜா, 2010-ம் ஆண்டு வெளியான ராவணன் உள்ளிட்ட இரண்டு படங்களில் தான் விக்ரம் கிராமத்து கதாபாத்திரங்களை ஏற்று நடித்து இருந்தார்.

இப்போது 10 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு விக்ரம் கிராமத்துக் கதை ஒன்றைத் தேர்வு செய்துள்ளார். அந்த படத்தை ஹரி இயக்குகிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடைசியாக விக்ரம்மை வைத்து சாமி 2 படத்தைத்தான் ஹரி இயக்கி இருந்தார். அதன் பிறகு சூர்யாவை வைத்து அருவா என்ற படத்தை இயக்க ஒப்பந்தமானார். ஆனால் அது சில காரணங்களுக்காகக் கைவிடப்பட்டது.

பின்னர் கோவிட்-19 ஊரடங்கு காலத்தில் அதே கதையை அருண் விஜய்க்கு சொன்னதாகவும், அவர் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் கூறப்பட்டது. ஆனால் படத்தின் பட்ஜெட், அருண் விஜய்க்கு உள்ள மார்க்கெட் போன்றவை ஒத்துப்போகவில்லை.

இந்நிலையில் அருவா படம் ஒரு மாஸ் சப்ஜெட் படம், அதில் ஒரு பெரிய ஹீரோ நடித்தால் தான் நன்றாக இருக்கும். எனவே இந்த கதையை ஹரி விக்ரமிடம் கூறியதாகவும், நீண்ட இடைவெளிக்குப் பிறகுக் கிராமத்துக் கதை என்பதால் விக்ரம் ஒப்புக்கொண்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

எனவே அருண் விஜய்க்கு வேறு கதையை ஹரி தயார் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

விக்ரம் இப்போது கோப்ரா, துருவ நட்சத்திரம், மகாவீர் கர்ணா, பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version