சினிமா செய்திகள்

விக்ரமுக்கு வில்லனாகும் பிரபல பாலிவுட் இயக்குநர்!

Published

on

இமைக்கா நொடிகள் படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகவுள்ள அடுத்த படத்தில் நடிகர் விக்ரம் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும், இந்த படத்தில் விக்ரமுக்கு வில்லனாக பாலிவுட் இயக்குநர் அனுராக் கஷ்யப் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

நயன்தாரா, விஜய்சேதுபதி, அதர்வா, ராஷி கண்ணா மற்றும் அனுராக் கஷ்யப் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான இமைக்கா நொடிகள் படம் இயக்குநர் அஜய் ஞானமுத்துவுக்கு வெற்றிப்படமாக அமைந்தது. அந்த படத்தில் வில்லனாக நடித்திருந்த பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் கஷ்யப் நடிப்பு பிரபலமாக பேசப்பட்டது.

இந்நிலையில், அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் விக்ரம் நாயகனாக நடிக்க உள்ளார். இமைக்கா நொடிகள் படத்தை தொடர்ந்து இந்த படத்திலும் அனுராக் கஷ்யப்பை வில்லனாக நடிக்க வைக்க அஜய் ஞானமுத்து முயற்சி செய்து வருவதாகவும், விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிகிறது.

seithichurul

Trending

Exit mobile version