சினிமா செய்திகள்

மகேஷ்பாபு படத்தில் விக்ரம் நடிப்பது உண்மையா? அதிகாரபூர்வ விளக்கம்!

Published

on

பிரபல தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் அடுத்த படத்தில் விக்ரம் நடிக்க இருப்பதாகவும் அவர் அந்த படத்தில் வில்லனாக நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியானது.

இந்த செய்தி கிட்டதட்ட அனைத்து ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் வைரலானது என்பது தெரிந்ததே. சமீபத்தில் வெளியான ’மகான்’ திரைப்படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் விக்ரம் நடித்த இருந்ததால் மகேஷ்பாபுவின் படத்தில் வில்லனாக நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது. இதனை அடுத்து இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது .

இந்த நிலையில் சற்று முன் விக்ரமின் மேனேஜர் தனது டுவிட்டர் பக்கத்தில் இது குறித்து விளக்கமளித்துள்ளார். மகேஷ்பாபுவின் அடுத்த படத்தில் சியான் விக்ரம் நடிக்க இருப்பதாக வெளிவந்த தகவல் அனைத்தும் வதந்தியே. இது ஒரு உறுதி செய்யப்படாத தகவல். பத்திரிகைகள் தயவு செய்து இது போன்ற செய்திகளை வெளியிடும் போன் எங்களிடம் உறுதி செய்துகொண்டு வெளியிடவும் என்று கேட்டுக் கொள்வதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை அடுத்து தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிக்கும் அடுத்த படத்தில் விக்ரம் நடிக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

seithichurul

Trending

Exit mobile version