சினிமா செய்திகள்

சீயான் விக்ரமின் ’சூறையாட்டம்’: அதிரடி அறிவிப்பு!

Published

on

பிரபல நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் ஆகிய இருவரும் இணைந்து நடித்து வரும் திரைப்படம் ‘மகான்’ என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் தெரிந்ததே.

இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள், கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள் ஆகியவை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும், இந்த படத்தை வரும் டிசம்பர் மாதம் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் துருவ் விக்ரம் கேரக்டர் குறித்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த கட்டமாக இந்த படத்தின் சிங்கிள் பாடல் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
’சூறையாட்டம்’ என்று தொடங்கும் இந்த பாடலை சந்தோஷ் நாராயணன் கம்போஸ் செய்துள்ள நிலையில் இந்த பாடல் வரும் 22ஆம் தேதி வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், விக்ரம், துருவ் விக்ரம், சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா நடிப்பில் உருவாகியுள்ள இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படத்தை முடித்துவிட்டு மேலும் ’பொன்னியின் செல்வன்’ ’துருவ நட்சத்திரம்’ ஆகிய படங்களில் விக்ரம் நடித்து வருகிறார் என்பதும், அடுத்ததாக அவர் பா ரஞ்சித் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த படத்தை முடித்துவிட்டு துருவ் விக்ரம், மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் அடுத்த படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version