சினிமா செய்திகள்

விமர்சனம்: கரை சேர்ந்தானா இந்த கடாரம் கொண்டான்!

Published

on

மன்மதன் அம்பு, தூங்காவனம் என கமலை வைத்து இரு படங்களை இயக்கிய ராஜேஷ் எம் செல்வா இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் தான் கடாரம் கொண்டான்.

பிரெஞ்ச் மொழியில் ஒரிஜினலாக எடுக்கப்பட்ட இந்த படத்தின் கதையை கொரியா, ஆங்கிலம் என பல தடவை ஹாலிவுட்டில் அடித்து துவைத்துவிட்டு, பின்னர், அதனை தமிழுக்கும் கொண்டு வந்துள்ளனர்.

டபுள் ஏஜெண்டாக விக்ரம் படு மாஸாகவும், ஸ்டைலிஷாகவும் ஒரு பாண்ட் கேரக்டர் போலவே படம் முழுக்க வருகிறார்.

அபிஹாசன் தனது கர்ப்பிணியான மனைவி அக்‌ஷரா ஹாசனை காலை வேளையில் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற அக்கறையில் நைட் ஷிஃப்ட் செல்கிறார்.

படத்தின் துவக்கத்தில், ஒரு கொலை பழியில் இருந்து தப்பிக்கும் விக்ரம் ஒரு விபத்துக்குள் சிக்கி மருத்துவமனையில் போலீஸ் கஸ்டெடியில் அனுமதிக்கப்படுகிறார்.

அந்த மருத்துவமனைக்குள்ளும் புகுந்து விக்ரமை கொல்லப் பார்க்கின்றனர். ஆனால், அதிர்ஷ்டவசமாக அபிஹாசன் விக்ரமை காப்பாற்ற, அவரது மனைவியை ஒருவர் கடத்திச் செல்கிறார்.

விக்ரமை வெளியே கொண்டு வந்தால், மனைவியை விடுதலை செய்வோம் என்று மிரட்ட விக்ரமை வெளியே கொண்டு வரும் முயற்சியில் ஈடுபடும் அபிஹாசன் அடுத்தடுத்து சந்திக்கும் சிக்கல்களும், இறுதியில் விக்ரம் அக்‌ஷரா ஹாசன் அபி ஹாசன் வாழ்வின் பிரச்னையை தீர்த்தாரா இல்லை தன்னோட பிரச்னையிலிருந்து வெளிய வந்தாரா இல்லையா என்பது தான் மீதிக் கதை.

அக்‌ஷரா ஹாசன் ஆரம்பக் காட்சியிலிருந்து அழுத வண்ணமே இருக்காங்களேன்னு பார்த்துட்டு இருந்தா கிளைமேக்ஸ் காட்சியில, ஒரு தாய் பூனை தன்னோட குட்டிக்காக புலிக்கூடையே சண்டை போடும்னு சொல்ற அளவுக்கு ஒரு பெர்ஃபார்மன்ஸ் பண்ணிருக்காங்க ஆஸம்.

நாசர் சாரோட மகன் அபிஹாசன் இந்த படத்தை எல்லா எடத்துலையும் ஆரம்பம் முதல் கடைசி வரை என்கேஜிங்கா கூட்டிட்டு போயிருக்காரு.

ஜிப்ரான் இசை படத்திற்கு இன்னொரு ஹீரோன்னே சொல்லலாம். மியூசிக் இல்லாம படத்தை பார்த்தா படம் மொக்க தான்.

மொத்தத்துல ஸ்கெட்ச், சாமி 2 படங்கள் மூலம் ரசிகர்களை ஏமாற்றம் அடைய வைத்த விக்ரம், இந்த முறை அதை பண்ணல, ஆனா ராஜேஷ் எம் செல்வா இன்னமும் விக்ரம் சார்க்கான கதைய டெப்த்தா கொடுத்திருக்கலாம்னு தோணுது.

சினிமா ரேட்டிங்: 3.25/5.

seithichurul

Trending

Exit mobile version