சினிமா

நடிகர் விக்ரமுக்கு கொரோனா – அதிர்ச்சியில் சினிமா உலகம்

Published

on

2 வருடங்களுக்கு முன்பு உருவான கொரோனா வைரஸ் இந்தியாவில் இன்னும் குறைந்தபாடில்லை. தமிழகத்திற்கு அருகில் உள்ள கேரள மாநிலத்தில் அதிகமான பேர் தினமும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதில் நடிகர்களும் தப்பவில்லை. பாலிவுட், கோலிவுட், டோலிவுட், மல்லுவுட் என பல நடிகர், நடிகைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டனர். பலரும் உயிரிழந்தனர். தமிழ் சினிமாவிலும் சில நடிகர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தனர்.

சமீபத்தில் நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். ஒரு வார சிகிச்சைக்கு பின் அவர் அதிலிருந்து மீண்டார். அதேபோல், தமிழில் பல திரைப்படங்களில் நடித்தவருமான நடிகர் அர்ஜூன் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டார். அவரும் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், நடிகர் சியான் விக்ரம் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். ஆழ்வார்பேட்டையிலுள்ள தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்த போது அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அவருக்கு லேசான அறிகுறியே உள்ளதால் விக்ரம் வீட்டு தனிமையில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Trending

Exit mobile version