சினிமா செய்திகள்

எஸ்.எஸ்.ராஜமெளலியின் அடுத்த படத்தில் விக்ரம்?

Published

on

பிரமாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமெளலி தற்போது ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்டிஆர் நடித்து வரும் ’ஆர்.ஆர்.ஆர்’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார் என்பதும் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஜனவரி 7ஆம் தேதி என நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான புரமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் எஸ்எஸ் ராஜமெளலி இயக்கும் அடுத்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு நடிக்க இருப்பதாகவும் இந்த படமும் தமிழ் தெலுங்கு உட்பட ஐந்து மொழிகளில் உருவாக இருப்பதாக செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் எஸ்எஸ் ராஜமெளலி மற்றும் மகேஷ்பாபு இணையும் திரைப்படத்தில் வில்லனாக நடிக்க சியான் விக்ரமிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் இதுவரை விக்ரம் இந்த படத்தில் நடிப்பதற்கான ஒப்புதலை கொடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

ஆனால் அடுத்தடுத்த பேச்சுவார்த்தையில் விக்ரம் இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொள்வார் என்றும் இந்த படத்தில் நடிப்பதற்காக அவருக்கு இதுவரை அவர் வாங்காத மிகப் பெரிய தொகை சம்பளமாக வழங்க தயாரிப்பு தரப்பு முன்வந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

எனவே எஸ்எஸ் ராஜமெளலி, மகேஷ்பாபு, விக்ரம் இணையும் புதிய படத்தின் அறிவிப்பு மிக விரைவில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக திரையுலக வட்டாரங்கள் கூறுகின்றன.

seithichurul

Trending

Exit mobile version