தமிழ்நாடு

‘சுகர், BP இருக்கு- வாக்கு போடுங்கனு ஏன் பிரச்சாரம் பண்றேன்!’- அமைச்சர் விஜயபாஸ்கரின் ‘அடடே’ விளக்கம்

Published

on

எதிர் வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தொடர்ந்து மூன்றாவது முறையாக புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலைத் தொகுதியில் போட்டியிடுகிறார். தொடர்ந்து இரண்டு முறை அந்த தொகுதியில் எம்.எல்.ஏ- வாக இருக்கும் விஜயபாஸ்கர், இந்த முறையும் வெற்றி பெறுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதையொட்டி அவர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். 

சில நாட்களுக்கு முன்னர் அவர், ‘தொடர்ந்து பொது வாழ்க்கையில் மக்களுக்குச் சேவை செய்து வருவதால் நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்த நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளேன். மக்களுக்காகவே இந்த வேதனைகளைப் பொறுத்துக் கொள்கிறேன்’ எனப் பரப்புரை மேற்கொண்டார். இது எதிர்க்கட்சிகளால் கடும் விமர்சனம் செய்யபட்டது. 

இது பற்றி அவர், ‘நான் என் உடல்நிலை குறித்து ஒரேயொரு இடத்தில் தான் பேசினேன். தொடர்ந்து பொது வாழ்க்கையில் ஈடுபடுதவதால், சுக துக்கங்களை மறந்துவிட்டு நான் மக்களுக்கு சேவையாற்றிக் கொண்டிருக்கின்றேன். இதைத் தான் மக்கள் மத்தியிலும் கூறினேன். அப்படி சொல்லி ஓட்டு கேட்பது எந்த விதத்திலும் தவறில்லை என்றே நினைக்கிறேன். 

விராலிமலைத் தொகுதியில் என் முகத்தைக் காட்டினாலே மக்கள் வாக்கு போட தயாராக இருக்கிறார்கள். நான் அந்தளவுக்கு இந்த தொகுதிக்கும் இந்த தொகுதி மக்களுக்கும் நல்லது செய்திருக்கின்றேன்’ என்றுள்ளார். 

Trending

Exit mobile version