சினிமா செய்திகள்

‘சேது ஒழுங்கா வேலை பாக்குறானா?’- விஜயிடம் விசாரித்த விஜய் சேதுபதி அம்மா!

Published

on

மாஸ்டர் திரைப்படத்துக்கான படப்பிடிப்பின் போது நடிகர் விஜய் சேதுபதியின் அம்மா நடிகர் விஜயை சந்தித்தது குறித்த அனுபவங்களை விஜய் சேதுபதியே பகிர்ந்துள்ளார்.

தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட விஜய் சேதுபதி மாஸ்டர் திரைப்படத்தின் ஷூட்டிங் அனுபவங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். நடிகர் விஜய் சேதுபதியின் அம்மா தளபதியை பார்க்க வேண்டும் என மாஸ்டர் கமிட் ஆனவுடனே கேட்டுக் கொண்டாராம். இதன் அடிப்படையில் படப்பிடிப்பு தளத்துக்கே அழைத்துச் சென்று அம்மாவின் ஆசையை விஜய் சேதுபதி நிறைவேற்றி வைத்துள்ளார்.

அம்மா மற்றும் மனைவி உடன் விஜய் சேதுபதி

இதுகுறித்து விஜய் சேதுபதி கூறுகையில், “அம்மா நடிகர் விஜயை முதலில் பார்க்க வேண்டும் எனக் கேட்ட போது எனக்கு மிகவும் ஆச்சர்யமாகவும் வியப்பாகவும் இருந்தது. சேது நல்லா வேலை பாக்குறானா? என அம்மா விஜய் இடமே கேட்டார். அதற்கு விஜய் என்னைப் பற்றி நிறைய புகழ்ந்து பேசியது அம்மாக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு” எனத் தெரிவித்துள்ளார்.

Trending

Exit mobile version