சினிமா செய்திகள்

’மாமனிதன்’ ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றம்: வருமா? வராதா?

Published

on

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவான திரைப்படம் ’மாமனிதன்’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 2020ம் ஆண்டு முடிவடைந்து ஏற்கனவே பல ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டது, ஆனால் இந்த படத்திற்கு ஏற்பட்ட பிரச்சனை காரணமாக ரிலீஸ் தேதி தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் மே 6-ஆம் தேதி ’மாமனிதன்’ ரிலீசாகும் என்றும் அதன் பின்னர் மே 20ஆம் ரிலீஸ் ஆகும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது மீண்டும் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டு ஜூன் 24ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

’மாமனிதன்’ திரைப்படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை பெற்ற நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆர்கே சுரேஷ் இதுகுறித்து கூறிய போது, ‘’மாமனிதன்’ படம் மிக சிறப்பாக வந்திருக்கிறது என்றும் இந்த படம் கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றி பெறும் என்றும் விஜய் சேதுபதிக்கு தேசிய விருது கிடைக்கும் அளவுக்கு தரமான படம் என்றும் கூறினார் .

எனவே இந்த படத்தை தமிழகத்தில் சுமார் 400 திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் எனவே தான் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஜூன் 24வது தேதியாவது திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகுமா? அல்லது மீண்டும் ரிலீஸ் தேதியில் மாற்றம் ஏற்படுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

seithichurul

Trending

Exit mobile version