சினிமா செய்திகள்

3 மாதங்களில் 4 படங்களை ரிலீஸ் செய்யும் விஜய்சேதுபதி!

Published

on

ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மூன்று மாதங்களில் விஜய் சேதுபதியின் நான்கு படங்கள் வெளியாக இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் சேதுபதி ஒவ்வொரு ஆண்டும் சுமார் பத்து படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டு வருகிறார் என்பதையும், அதில் சுமார் 6 படங்கள் வெளியாகி வருகின்றன என்பதையும் பார்த்து வருகிறோம்

இந்த நிலையில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்றா திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது. இதனை அடுத்து மே மாதம் ஏற்கனவே விஜய் சேதுபதி நடித்த ’மும்பைகார்’ என்ற பாலிவுட் திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில் தற்போது மே 6-ஆம் தேதி அவரது நடிப்பில் நீண்ட நாளாக கிடப்பில் இருந்த ’மாமனிதன்’ என்ற திரைப்படம் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

மேலும் கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதி நடித்த ’விக்ரம்’ திரைப்படம் ஜூன் மூன்றாம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அதிகாரபூர்வமாக கமல்ஹாசன் அறிவித்துள்ளார். எனவே ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மூன்று மாதங்களில் விஜய் சேதுபதி நடித்த ’காத்துவாக்குல ரெண்டு காதல்’, மும்பைகார், மாமனிதன் மற்றும் விக்ரம் ஆகிய படங்கள் வெளியாக உள்ளதால் அவரது ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.

 

seithichurul

Trending

Exit mobile version