சினிமா

விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் டீசர் ஆயுதபூஜைக்கு வெளியாகிறது!

Published

on

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிப்பில், ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் சர்கார் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் ஷூட்டிங் ஸ்பாட் படங்களை வெளியிட்டுள்ளது மக்கள் மத்தியில் மிகப் பெரிய வர வேற்பினை பெற்றுள்ளது.

இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை கீர்த்திச் சுரேஷ் நடித்துள்ளார். இப்படத்திற்கு இசைப்புயல் மற்றும் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இதன் இசை வெளியீட்டு விழா கடந்த 2ஆம் தேதி பிரமாண்டமாக நடைபெற்றது.

டிஜிட்டல் தொழில்நுட்ப முறையில், அதற்காகப் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட இணையதளமான www.sarkar.sunpictures.in மூலம், விழாவில் கூடியிருந்த அவரது ரசிகர்கள் தங்கள் கைகளில் வைத்திருந்த மொபைல் போன்களின் மூலம் அனைத்துப் பாடல்களையும், வெளியிட்டனர். இந்த முயற்சி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

ஒரே நாளில் தமிழ், தெலுங்கு, மலையாளம் எனப் பல மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது. தெலுங்கு டப்பிங்கிற்கான பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து டிவிட்டரில் பதிவிட்ட நடிகை வரலக்ஷ்மி சரத்குமார், தான் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கு டப்பிங் பேசி வருவதாகக் கூறியுள்ளார்.

மேலும், இப்படத்தின் டீசர் ஆயுத பூஜையை முன்னிட்டு வரும் 18ம் தேதி வெளியாகவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே விஷாலின் சண்டக்கோழி 2 படம் ஆயுத பூஜையை முன்னிட்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், 17ம் தேதி தனுஷின் வட சென்னை படமும் திரைக்கு வரவுள்ளது.

Trending

Exit mobile version