சினிமா

இன்றே வெளியான சர்கார் திரைப்படம்: ரசிகர்கள் உற்சாகம்!

Published

on

இயக்குநர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்த, நடிகர் விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு நாளை வெளியாகி உள்ளது. ஆனால் அமெரிக்காவில் இந்த திரைப்படம் இன்றே வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

நாளை வெளியாக உள்ள விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் கதை திருடப்பட்ட கதை என சர்ச்சை உருவாகி பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. இது இந்த படத்துக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

இந்நிலையில் இந்த திரைப்படம் தீபாவளியான நாளை உலகம் முழுவதும் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அமெரிக்காவில் மட்டும் இன்றே பிரீமியர் காட்சிகள் திரையிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version