Connect with us

விமர்சனம்

நல்ல மார்க் வாங்கி இருக்க வேண்டிய மாஸ்டர் பார்டரில் பாஸ் ஆகியிருக்கிறார்… மாஸ்டர் விமர்சனம்…!

Published

on

சென்னையில் எப்போதும் குடி போதையில் அடாவடி செய்து கொண்டு திரியும் கல்லூரி ஆசிரியர் ஜான் துரைராஜ் (விஜய்) ஒரு சந்தர்ப்பத்தில் நாகர்கோவிலில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு ஆசிரியராக செல்கிறார். அங்கே சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்பட்டு துன்புறுத்தப்படும் சிறுவன், வளர்ந்து பெரிய ரவுடியாக உருவாகியிருக்கிறான் பவானி (விஜய் சேதுபதி). தன் ரவுடிசத்திற்கு சீர்திருத்தப் பள்ளியில் இருக்கும் சிறுவர்களையே பயன்படுத்திக்கொள்கிறான். அங்கு வரும் புதிய ஆசிரியரான ஜான் துரைராஜ் (விஜய்), பவானியை வீழ்த்தி எப்படி சிறுவர்களைக் காக்கிறார் என்பதுதான் மாஸ்டர்.

தொடர்ந்து அட்லீ படத்தில் நடத்தி வெறுப்பேற்றிக் கொண்டிருந்த விஜய் மாநகரம், கைதி படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க போகிறார் என்ற அறிவிப்பு வந்ததும் அவரது ரசிகர்களுக்கு மட்டும் இல்லை காமன் ஆடியன்ஸ்-க்கும் பெரிய எதிர்பார்ப்பு தொற்றிக்கொண்டது. மாநகரம் மாதிரி செம்ம திரைக்கதை, கைதி மாதிரி ஆக்ஷன் அட்டகாசம் என மாஸ்டர் டபுள் ட்ரீட் இருக்கு என்ற எதிர்பார்ப்பு வேறு.
ஜேடி என்ற கல்லூரி ஆசிரியராக விஜய் எப்படியும் ஒரு ஐம்பது வயது இருக்கும். ஆனால், அவ்ளோ இளமையா இருக்கிறார். முதல் பாதி முழுவதும் அவ்வளவு மெனரிசம். பாடி லாங்குவேச் என மனிதன் அட்டகாசம் செய்திருக்கிறார். வழக்கமான விஜயாக இல்லாமல் அசத்தியிருக்கிறார். சண்டை, டான்ஸ் என படம் முதல் பாதி முழுவதும் இவரே ஆக்கிரமிக்கிறார். பிற்பாதியில் சீர்திருத்த பள்ளிக்கு செல்லும் விஜய் தன்னுடைய குடி, அடாவடிகளை நிறுத்து வேறு ஒரு ஆளாக வந்து நிற்கிறார் மீசை இல்லாமல் அழகாக. ஒவ்வொரு பிரேமும் விஜய் ஸ்கிரீனை முழுமையாக ஆக்கிரமிக்கிறார். பேசியே வில்லன்களை திருத்தவும் செய்கிறார் (எல்லாம் எவ்ளோ பாத்திருக்கும். லோகேஷ் நீங்களுமா?)


பவானியாக விஜய் சேதுபதி நீண்ட நாளுக்கு பிறகு கொஞ்சம் நடித்திருக்கிறார். சின்ன சின்ன வசனங்கள், பார்வை, நடை, உடை மூலமே வில்லத்தனத்தை காட்டியிருக்கிறார். முதல் பாதியில் கொஞ்சம், இரண்டாம் பாதியில் கொஞ்சம் கடைசியில் வழக்கமான வில்லனாக ஹீரோவிடம் அடி வாங்குவதற்கு கொஞ்சம் மட்டுமே விஜய் சேதுபதியை பயன்படுத்தியிருக்கிறார் லோகேஷ். ஆனாலும், ஹீரோவுக்கு நெருக்கமானவங்களை கொலை செய்வது, மிரட்டுவது என அதே பழைய பாணி வில்லத்தனமும் செய்ய வைத்திருக்கிறார்.
எல்லாம் நல்லா தானே இருக்கு என்று யோசித்தால் அது தான் இல்லை. இப்படி விஜய், விஜய் சேதுபதி என பிரித்து பார்த்தால் ஒவ்வொரு காட்சியும் நல்லா தான் இருக்கு. ஆனால் ஒட்டு மொத்தமாக பார்க்கும் போது ஒரு நல்ல காட்சி… நாலு மொக்க அல்லது இழுவை காட்சி என ஓவராக நம்மை சோதிக்கிறார் இந்த மாஸ்டர். படத்தில் வில்லனுக்கும் ஹிரோவுக்குமான ஒரு ரைவல் படத்தில் மிஸ்ஸிங். அதனால் படத்தின் இறுதி காட்சியில் எல்லாம் துளி கூட சுவாரஸ்யம் இல்லாமல் போகிறது. ஆன்டிரியா, மாளவிகா மோகன், சாந்தனு மற்றும் பலர் ஏன் இந்த படத்துக்கு என்றே தெரியவில்லை. பூவையார், அர்ஜுன் தாஸ்-க்கு ஓரளவு நடிக்க வாய்ப்பு தந்திருக்கிறார் லோகேஷ்.
இந்த படத்தை உண்மையில் போரடிக்காமல் கொண்டு செல்வது அனிருத்தின் இசை தான். விஜய்க்கும், விஜய் சேதுபதிக்கு பாரபட்சம் பார்க்காமல் பிஜிஎம் போட்டு அசத்திவிட்டார். பாடல்கள் ஏற்கெனவே ஹிட் என்பதால் அதை தனியாக சொல்லவில்லை.இந்த படம் உண்மையில் மாணவர்களுக்கான அரசியல் புரிதல் வேண்டும், சிறார் குற்றங்களின் பின்னணி, அதற்கான காரணம், அவர்களை மீட்கும் வழி என புதிய ஒரு கதை களத்தை கையில் எடுத்துக்கொண்டு ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அதன் நோக்கம் அதுவாக இல்லையா அல்லது ஹீரோவுக்காக மாற்றப்பட்டதா என தெரியவில்லை. நிறைய சண்டை காட்சி, அதிலே மாஸ் காட்சி, அதற்குள்ளே வில்லன், வில்லனுக்கு மாஸ் காட்சி என்று மட்டும் சுருங்கி விட்டது. உண்மையில் சுருங்கி இருக்க வேண்டியது எடிட்டிங்கில் தான். 3 மணி நேரம், சுவாரஸ்யம் இல்லாத அதும் ரசிகனின் பொறுமையை முழுமையாக சோதிக்கும் இரண்டாம் பாதியை அவ்ளோ நேரம் பார்ப்பது எல்லாம் கஷ்டமாத்தான் இருக்கு. லோகேஷ் கனகராஜின் சில க்ளிஜே காட்சிகளும் இருக்கின்றன. கமர்சியல் படங்களில் லாஜிக் எல்லாம் பார்க்க கூடாது தான் என்றாலும் ஒரு அளவில்லாமல் லாஜிக் ஓட்டைகள் வேறு. உண்மையில் டிஸ்டிங்சன் வாங்கியிருக்க வேண்டிய மாஸ்டர் பார்டரில் பாஸ் செய்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.

author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்9 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் (ஆகஸ்ட் 17, 2024)

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு19 மணி நேரங்கள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா19 மணி நேரங்கள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு19 மணி நேரங்கள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்19 மணி நேரங்கள் ago

H-1B விசா: இந்த ஆண்டும் இரண்டாம் சுற்று குலுக்கல்

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பொழியும்!

ஆரோக்கியம்19 மணி நேரங்கள் ago

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்பதற்கான 9 காரணங்கள்!

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

வணிகம்5 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

வணிகம்5 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

சினிமா2 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

வணிகம்4 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?

வணிகம்3 நாட்கள் ago

ஐடி துறையில் தொடரும் பணி நீக்கம்: 1,30,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இதுவரை பாதிப்பு!