தமிழ்நாடு

விரைவில் விஜயகாந்த் பிரச்சாரத்துக்கு வர உள்ளார்: பிரேமலதா தகவல்!

Published

on

தேமுதிக நிறுவனத்தலைவர் விஜயகாந்த் விரைவில் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்துக்கு வருவார் என அந்த கட்சியின் பொருளாளரும் விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வரும் 18-ஆம் தேதி மக்களவை தேர்தலும், 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெற உள்ளது. இதற்காக விஜயகாந்தின் தேமுதிக அதிமுக கூட்டணியுடம் இணைந்துள்ளது. இந்த கூட்டணியில் தேமுதிகவுக்கு 4 மக்களவை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக பிரேமலதா தீவிர பிரச்சாரத்தில் களமிறங்கியுள்ளார்.

தமிழகம் முழுவதும் அனைத்து அரசியல் கட்சியினரும், அதன் முக்கிய தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் உள்ளனர். ஆனால் தேமுதிகவை பொறுத்தவரை பிரேமலதா தான் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளார். ஆனால் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலம் காரணமாக பிரச்சாரத்தில் இறங்கவில்லை. இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரேமலதா, விஜயகாந்த் விரைவில் பிரச்சாரத்துக்கு வர உள்ள தகவலை வெளியிட்டார்.

நேற்று இரவு சிதம்பரம் தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பிரேமலதா, திமுக கூட்டணியில் தேமுதிகவை சேர்க்க பலமுறை முயற்சி செய்தனர். ஆனால் அதற்கு கேப்டன் விஜயகாந்த் மறுத்துவிட்டு தற்போது வலுவான கூட்டணியில் சேர்ந்துள்ளார். பொதுமக்களின் ஆசீர்வாதத்தால் விஜயகாந்த் தற்போது நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார். கட்சியின் செயல்பாடுகள் குறித்தும், பொதுமக்களின் நலன் குறித்தும் எங்களிடம் தொடர்ந்து விசாரித்து வருகிறார். நீங்கள் எதிர்பார்த்தபடி விஜயகாந்த் வெகுவிரைவில் தேர்தல் பிரசாரம் செய்ய வருவார். அவர் பிரசாரத்துக்கு வருகிற தேதியை கட்சி தலைமை விரைவில் அறிவிக்கும் என்றார்.

seithichurul

Trending

Exit mobile version