தமிழ்நாடு

பிரச்சாரத்தை ஆரம்பித்தார் விஜயகாந்த்: தொண்டர்கள் உற்சாகம்!

Published

on

வரும் சட்டமன்ற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துடன் கூட்டணி வைத்துள்ள விஜயகாந்தின் தேமுதிக 60 தொகுதிகளைப் பெற்றது என்பதும் 60 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது., தற்போது விஜயகாந்த் உடல்நலமின்றி இருக்கும் காரணத்தினால் அவர் பிரச்சாரம் செய்ய மாட்டார் என்றும் பிரேமலதா, எல்கே சுதீஷ், விஜய பிரபாகரன் ஆகியோர்கள் மட்டும் பிரச்சாரம் செய்வார்கள் என்று முதலில் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் திடீரென எல்.கே.சுதீஷ்க்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது பிரேமலதா மற்றும் விஜய பிரபாகரன் மட்டுமே பிரச்சாரம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கேப்டன் விஜயகாந்த் இன்று முதல் 5 நாட்களுக்கு பிரச்சாரம் செய்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று நீண்ட நாட்களுக்கு பிறகு பொதுவெளியில் விஜயகாந்த் பொதுமக்கள் முன் தோன்றி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தமிழக சட்டப்பேரவை தேர்தலில் கும்முடிபூண்டி தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் டில்லி அவர்களுக்காக அவர் வாக்கு சேகரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் அவர் பொதுமக்கள் மத்தியில் பேசவில்லை என்பதும் கைகளை மட்டும் அசைத்து ஓட்டு போடும் படி கேட்டுக்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. நீண்ட இடைவேளைக்குப் பின்னர் விஜயகாந்தை பார்த்த அவரது கட்சியின் தொண்டர்கள் உற்சாகமாக உள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version