தமிழ்நாடு

விமான நிலையத்தில் தூங்கி 10 மணி நேரம் தாமதமாக வந்த விஜயகாந்த்!

Published

on

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக அவதிப்பட்டு வருகிறார். இதனால் தீவிர அரசியலில் ஈடுபடமுடியாமல் தொடர் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் மீண்டும் அமெரிக்காவுக்கு சிகிச்சைக்கு சென்ற விஜயகாந்த் நேற்று முன்தினம் சென்னை திரும்பினார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் அமெரிக்காவில் தங்கி சில மாதங்கள் சிகிச்சை எடுத்துக்கொண்டார். இதனையடுத்து அவர் பூரண உடல் நலத்துடன் சென்னை திரும்ப உள்ளார் என தேமுதிக தலைமைக்கழகம் அறிவித்தது. இதனையடுத்து அவர் அமெரிக்காவில் சிகிச்சை முடித்துக்கொண்டு நேற்று முன்தினம் அதிகாலை 3 மணியளவில் சென்னை விமானநிலையத்துக்கு வந்தார்.

ஆனால் அவர் உடனடியாக வெளியே வராமல் 10 மணி நேர தாமதத்திற்கு பின்னர் 12 மணியளிவில்தான் வெளியே வந்தார். இதனையடுத்து இந்த தாமதம் குறித்து அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் விளக்கம் அளித்துள்ளார். அதில், நாங்கள் அதிகாலை 3 மணிக்குதான் இங்கு வந்து இறங்கினோம். மொத்தம் 25 மணிநேரம் பயணம் செய்து வந்திருக்கிறோம். அதனால் அவர் தூங்கிவிட்டார். காலை எழுந்து டிபன் சாப்பிட்டுவிட்டு தற்போது வருகிறோம், வேறொன்றுமில்லை என்றார்.

seithichurul

Trending

Exit mobile version