தமிழ்நாடு

வேளாண் சட்டங்களை ரத்து செய்தால் மட்டும் போதாது? விஜயகாந்த்

Published

on

வேளாண் சட்டங்களை ரத்து செய்தால் மட்டும் போதாது விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கடந்த சில மாதங்களுக்கு முன் மூன்று வேளாண்மை சட்டங்களை அமல் படுத்தியது. இந்த சட்டத்திற்கு பஞ்சாப் உள்பட ஒருசில வட மாநில விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் செய்தனர். இந்த போராட்டம் கிட்டத்தட்ட ஒரு வருட காலம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் விரைவில் தேர்தல் வர உள்ளதால் 3 வேளாண்மை சட்டங்களையும் வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி இன்று காலை தெரிவித்தார். அவருடைய அறிவிப்புக்கு விவசாயிகள் பெரும் வரவேற்பு தெரிவித்தனர் என்பதும் ஒரு வருட கால போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்றும் கொண்டாடி வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விவசாயிகள் சட்டம் வாபஸ் பெற்றதற்கு பல அரசியல் கட்சி தலைவர்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர். அந்த வகையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் இதுகுறித்து கூறிய போது மூன்று வேளாண்மை சட்டங்களை ரத்து செய்வதாக பிரதமர் மோடி அறுபத்தி உள்ளதை வரவேற்கிறேன்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். விவசாயிகளை மக்களை வஞ்சிக்கும் புதிய சட்டங்களை எதிர்காலத்தில் மத்திய அரசு அமல்படுத்த கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version