சினிமா செய்திகள்
பிரேமலதா பிறந்த நாளில் வெளியான விஜயகாந்த் புகைப்படம்: ரசிகர்கள் ஆறுதல்!
கடந்த சில நாட்களுக்கு முன்னர் விஜயகாந்தின் புகைப்படம் ஒன்று வெளியாகி அதிர்ச்சியை அளித்த நிலையில் நேற்றைய பிரேமலதா விஜயகாந்த் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கபட்ட புகைப்படம் தற்போது ரசிகர்களுக்கு ஆறுதல் அளித்து உள்ளது.
விஜயகாந்தின் மனைவியும் தேமுதிக கட்சியின் பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்த் நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடினார். இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது கணவர் விஜயகாந்த் மற்றும் தனது இரண்டு மகன்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பதிவாகி உள்ளது
இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் சற்று ஆறுதல் பெற்றுள்ளனர். ஏனெனில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியான விஜயகாந்தின் புகைப்படத்தை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்த நிலையில் நேற்று வெளியான இந்த புகைப்படத்தில் விஜயகாந்து ஓரளவுக்கு தெளிவாக இருக்கிறார்
சோர்வாக இருந்தாலும் அவரது கண்களில் பழைய ஒளி அப்படியே தெரிகிறது என்பதால் விஜயகாந்த் மீண்டும் குணமாக வாய்ப்பு இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன